வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களின் மோதலை உறுதி செய்த முக்கிய சினிமா பிரமுகர்! தேதியுடன் இதோ

 

அஜித் மற்றும் விஜய்

தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இவர்கள் இருவரும் தங்களின் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தனர், அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு இரண்டு திரைப்படங்களின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இதில் வாரிசு திரைப்படம் ஏற்கனவே பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. துணிவு திரைப்படம் திடீரேன பொங்கலில் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களின் மோதலை உறுதி செய்த முக்கிய சினிமா பிரமுகர்! தேதியுடன் இதோ | Varisu Vs Thunivu Official Dates

வாரிசு Vs துணிவு

இந்நிலையில் முக்கிய சினிமா பிரமுகர் திருப்பூர் சுப்பிரமணியம் இது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது “வாரிசு மற்றும் துணிவு பொங்கலுக்கு வெளியாகிறது என்பது உறுதியான தகவல்தான்.

துணிவு ஜனவரி 12 அன்றும் வாரிசு ஜனவரி 13 வெளியாகின்றன, இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் இரண்டிற்கும் சமமான திரையரங்குகள் நிச்சயம் கிடைக்கும்” என பேசியிருக்கிறார்.   

வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களின் மோதலை உறுதி செய்த முக்கிய சினிமா பிரமுகர்! தேதியுடன் இதோ | Varisu Vs Thunivu Official Dates

Comments